ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் ரஜினிகாந்த்? தனுஷ் இப்படி பண்ணது தான் காரணமாம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ் இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்திலும் குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகன் பிறந்த சில நாட்களில் ஆல்யாவின் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
பணிகளில் மும்முரமாக ஐஸ்வர்யா
இதையடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாகினர். ஐஸ்வர்யா தனது முசாபிர் ஆல்பம் பாடல் தயாரிப்பில் ஈடுப்பட்ட நிலையில் அந்த ஆல்பம் பாடல் வெளியானது.
நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதால் அவர் நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக களம் காண உள்ளார்.

மகன்களுடன் தனுஷ்
இந்த நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் பிசியான நிலையிலும் தன் மகன்களுடன் நேரம் செலவழித்து வருகிறார்.
இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் தனது இரு மகன்களையும் அழைத்து சென்றிருந்தார் தனுஷ். மகன்களும் அப்பாவுடன் இருப்பது ஜாலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் ரஜினியின் காதுக்கு செல்ல அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். தனது மனைவி லதாவிடம் முதலில் குடும்பம் அதுக்கப்பறம் தான் வேலை எல்லாம் என்று சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து ஐஸ்வர்யா தனது அப்பாவின் கோபத்தை குறைப்பதற்காக தனது மகன்களுடன் தற்போது நேரத்தை செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.

தவறு நடந்துருச்சு.. மன்னிச்சிடுங்க? என்ன நடந்தது குக் வித் கோமாளியில்?