என் சினிமா வாழ்க்கை பாழாப்போனதற்கு ரஜினிதான் காரணம்: மனிஷா கொய்ராலா
ரஜினிகாந்துடன் நடித்த பாபா திரைப்படம் தான் என் சினிமா வாழ்க்கையை பாழாக்கியது என மனிஷா கொய்ராலாவின் பேச்சு தற்போது சர்ச்சையோடு வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த்.
அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார். குடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
மேலும், கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.
ரஜினியால் பாழாப்போன சினிமா
ரஜினியைப் போலவே ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா.
இவர் தமிழில் பம்பாய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதன் பின் இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.
அப்போது திடீரென கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்று சினிமா பக்கம் வராமல் இருந்தார். அவர் சற்று குணமானதும் தமிழ், மற்றும் ஹிந்தி திரைப்படத்தில் சிறு சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த பாபா திரைப்படம் தான் என் திரையுலக வாழ்வையே அழித்த படம் என்றும், தென்னிந்திய மொழிகளில் தனக்கு இருந்த ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சீரழித்த ஒரு படம் என்றால் அது ரஜினியுடன் நடித்த பாபா படம் தான் என்று பகிரங்கமாகவே ரஜினி மீது குறை கூறியுள்ளார்.