படையப்பா பட காட்சியையே ரீகிரியேட் செய்த சுவீடன் தம்பதியினர்! மிரண்டு போன நெட்டிசன்கள்
படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியை சுவீடன் நாட்டை சேர்ந்த தம்பதியினர் அச்சு அசல் அப்படியே ரீகிரியேட் செய்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நாளைய தினம் தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டவுள்ள நிலையில், அவரின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படையப்பா திரைப்படம் உலகெங்கிவலும் உள்ள திரையரங்குகளில், ரீ-ரிலீஸ் ஆகிறது.

75 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகின்றார். எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துகொண்டுள்ளதுடன், ஹீரோவாகவே அசத்தி வருகின்றார்.

இவரின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாத வகையில், தனக்கென ஒரு தனித்துமான பாணியை வைத்திருக்கும் இவரின் நடிப்புக்கு உலகளவில் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
இதனை பறைசாற்றும் வகையில், சுவீடன் நாட்டை சேர்ந்த தம்பதியினர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, படையப்பா திரைப்பட காட்சியை ரீகிரியேட் செய்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |