வீட்டில் குட்டி பல்லி அடிக்கடி தென்படுதா? அப்போ இந்த தவறை மட்டும் பண்ணீறாதிங்க!
பொதுவாகவே இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் பல்லிகள் எதிர்கால நிகழ்வுகளுடன் மிகவும் நெருங்கிய வகையில் தொடர்புப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
பல்லிகளை வைத்து சகுணம் பார்க்கபபடும் வழக்கம் தொன்று தொட்டு புலக்கத்தில் உள்ள ஒரு நடைமுறையாக அறியப்படுகின்றது.

பொதுவாக வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான். ஆனால் இந்துக்களின் நம்பிக்கை பிரகாரம் பல்லிகள் சத்தமிடுவது, குட்டி பல்லியை காண்பது, பல்லிகள் புணருவது என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கொடுக்கப்டுகின்றது.
பல்லிகள் இருப்பதை வைத்து தான் முன்னைய காலங்களில் மனிதர்கள் வாழும் இடங்களை கணித்தனர்.

பல்லிகள் இருக்கும் இடம் தான் மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்தமான நேர்மறை ஆற்றல்கள் நிறைந்ததாக இருக்கும் என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
பல்லி குட்டியை பார்ப்பது அதிர்ஷமா?
வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் மங்களகரமானதாகவே பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் மிகவும் அரிதாக வீட்டில் குட்டி பல்லிகள் இருப்பதை காண்கின்றீர்கள் என்றால் அது செல்வ செழிப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.

குட்டி பல்லியை காணப்பதால், வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்வை முக்கூட்டியே தெரிப்பதாகவே குட்டி பல்லிகளின் நடமாட்டம் பார்க்கப்படுகின்றது. இது லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் என்பதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டி பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் அரிய நிகழ்வாகும். இதனால் ராஜயோகத்தை பெறப்போகின்றீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத வகையில், பொருளாதார ரீதியில் உச்சநிலைக்கு செல்லப்போகின்றீர்கள் என்பதை குறியீடு மூலம் காட்டுவதே குட்டி பல்லிகளின் கூட்டத்தை காண்பது.
மிகவும் முக்கியமாக விடயம் என்னவென்றால், உங்கள் வீட்டில் பல்லி குட்டியை கண்டால் அதை விரட்டவோ, கொல்லவோ கூடாது. குட்டிப்பல்லியை கொல்வதால், வாழ்க்கை முழுவதும் தீராத வகையில் பெரும் பணக்கஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும்.

ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் அதை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அதை நிலத்தில் புதைத்தால் போதுமானது. அதனால் எந்தவிம பாதிப்தையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |