ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க
பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுளின் பெருக்கம், ஒரு இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்தமை, சரியான தூக்கமின்மை, போதியளவு உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம் அதிகரித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் உடல் மற்றும் உள ஆரோக்கியமானது வலுவாக பாதிக்கப்படுகின்றது.

தற்காலத்தில், முதியவர்களுக்கு மட்டுமன்றி இளம் வயதினருக்கும், நீரிழிவு, உடற்பருமன், இதய நோய் அபாயங்கள், சிறுநீரக கல், கல்லீரல் பாதிப்பு என ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரித்து வருவதுடன், அல்சைமர், மனஅழுத்தம், ஆன்சைட்டி பிரச்சினை என உள ஆரோக்கிய பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.
இவை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை சீராக பேண தினசரி காலையில், பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அவசியம் பின்பற்ற வேண்டியவை

ஆரோக்கியமான தூக்கம்- நல்ல இரவு ஓய்வு பெறுவது உற்பத்தித்திறனுக்கு மிகவும் முக்கியமானது. அந்தவகையில் காலையில் நீங்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் இரவு தரமான தூக்கத்தை பெற்றிருக்க வேண்டியது முக்கியம்.
சீரான தூக்கம் உடல், மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரவில் நல்ல தூக்கத்தை பெற ஒரு சூடான குளியல் எடுக்கவும் அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கவும்.குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னர் போனை தூரமான வைப்பது சிறப்பு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி சராசரியாக 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அவசியம்.

வேலைக்குச் செல்ல போதுமான நேரம் ஒதுக்குங்கள்- நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி, அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேலைக்குச் செல்ல போதுமான நேரம் ஒதுக்குவது அவசியம். இது உங்கள் உள ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் பதற்றமான தயாராவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாவதுடன்,நீங்களை நாள் முழுவதும் பதற்றத்துடன் இருப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

ஒரு கிளாஸ் தண்ணீர் - உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே காலையில் எழுந்ததும் முதவில் டீ அல்லது காபியில் நாளை ஆரம்பிக்காமல் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் காபி அல்லது டீ குடிக்கலாம். ஆனால் தவிர்ப்பது ஆரோக்கியம்.

உடற்பயிற்சி- காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி, நடனம் என ஏதாவது ஒரு உடலுக்கு அசைவு கொடுக்கும் விடயத்தை தெரிவு செய்து பின்பற்ற வேண்டியது அவசியம். மனச்சோர்வைத் தடுப்பது உடற்பயிற்சி செய்வதன் பல நன்மைகளில் ஒன்றாகும். மேலும் சிறந்த தூக்கம் மற்றும் அதிகரித்த ஆற்றல் என்பவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம்.

ஆரோக்கியமான காலை உணவு- உங்கள் உத்வேகத்தைத் தூண்டவும், உங்கள் நாளைச் சரியாகத் தொடங்கவும், உங்களை நன்றாக உணர வைக்கும் பொருட்களுடன் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரித்து சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம்.
உதாரணத்துக்கு ஒரு கிண்ணம் ஓட்ஸ் அல்லது ஒரு விரைவான ஸ்மூத்தி, அதிக தயாரிப்பு நேரம் தேவையில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். ஆனால் ஒருபோதும் காலை உணவை தவிக்கவே கூடாது.

நேர்மறை உறுதிமொழிகள் - தினசரி காலையில் நேர்மறையான உறுதிமொழிகளை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் உங்களைப் பற்றிய வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவும், தன்னம்பிக்கையான மனநிலையை ஆதரிக்கவும் இது பெரிதும் துணைப்புரியும்.
காலையில் சொல்லப்படும் நேர்மறையான உறுதிமொழிகள், நாள் முழுவதும் உங்களால் முடிந்ததைச் செய்யவும், உங்களை நம்பவும் உங்களைத் தூண்டும்.உங்கள் மீது உங்களுக்கு முதலில் நம்பிக்கை இருந்தால் தான் மற்றவர்கள் உங்களை நம்புவார்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில் காலையில் ஊக்கமளிக்கும் ஏதாவது ஒரு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். உதாரணமாக நான் சிறந்தவன், என்னால் முடியும் என்ற வார்த்தைகளை கண்ணாடி முன்னால் சொல்வது.

தியானம்- நிதானமான வழக்கத்தை விரும்புவோர், உங்கள் எண்ணங்களுடன் அமர்ந்து ஆழமாக சுவாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அது உங்களின் மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் உங்களை பதற்றமின்றி நிதானமாக வைத்துக்கொள்ளும். இவ்வாறான வாழ்க்தை முறை பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதுடன், மது , புகைத்தல் போன்ற தீய பழக்கங்களில் இருந்தும் விலகி இருப்பதால், உங்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்டுத்த முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |