பிக்பாஸ் தாமரை செல்வி பற்றி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூப்பராக விளையாடி அனைவரையும் வாய்பிளக்க வைத்துவிட்டார் தாமரை செல்வி.
ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குபிடிப்பார் என பலரும் விமர்சனம் செய்த நிலையில், அனைத்தையும் பொய்யாக்கிவிட்டார் தாமரை செல்வி.
இவரை பற்றி பிரபல பாடகியான ராஜலட்சுமி கூறுகையில், தாமரைச்செல்வி அக்காவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாட வந்தபோது சந்தித்தேன்.
அன்றிலிருந்து எனக்கு அவரை தெரியும், நல்ல பழக்கம், அதன்பின் சில ஆண்டுகளாக அவரை நான் பார்க்கவோ, பேசவோ இல்லை.
அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது, ஒரு நாடக கலைஞருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
இது அவரின் வாழ்க்கைக்கும் நாடகத்துக்கும் ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்று கூறியுள்ளார்.
