உங்களை எப்படி கரெக்ட் செய்வது? ரசிகரின் கேள்விக்கு ராஜா ராணி நடிகை உடைத்த உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் நாயகியிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா ராணி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக ஆல்யா நடித்து வந்தார். இவர் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்து, அதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவத்தின் போது குறித்த சீரியலில் இருந்து விலகினார். கடந்த மாதம் மகன் பிறந்துள்ள நிலையில் மகனுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.
ராஜா ராணி சீரியலில் சந்தியா ஐஏஎஸ் அதிகாரியாக விரும்பி எதிர்பாராதவிதமாக சரவணனை திருமணம் செய்து கொள்கிறார்.
சரவணன் திருமணத்திற்குப் பிறகு சந்தியாவின் லட்சியத்தை உணர்ந்து அவளது கனவை விவேகத்துடன் அடைய உதவுகிறான் என்பது தான் மையக்கதை.
இதில் நாயகியாக சந்தியாவாக ஆல்யா மானசாவும், நாயகன் சரவணனாக சித்துவும் நடித்து வந்த வந்தனர். சீரியல் ரசிகர்களும் வழக்கம் போல் தங்களின் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.
போனில் எச்சில் துப்பி இளம்பெண் செய்த அசிங்கம்: முகம்சுழிக்கும் காட்சி
ரியா கொடுத்த புது ட்விஸ்ட்
சந்தியாவாக நடித்த ஆல்யாவிற்கு பதிலாக மாடலிங்கான ரியா விஸ்வநாதன் சின்னத்திரையில் குறித்த சீரியலில் முதல் முதலாக களமிறங்கியுள்ளார்.
மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோ ஷுட்கள் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டா மூலம் ரசிகர்களிடம் பேசிய இவரிடம், ‘இவ்வளவு அழகாக உள்ளீர்களே உங்களை எப்படி கரெக்ட் செய்வது’ என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், ‘பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று கூறி அந்த ரசிகருக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
குறித்த நடிகை காதலிப்பதாக கூறும் நடிகர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் என்று கூறப்படுகின்றது.
முட்டை அதிகமா சாப்பிடாதீங்க! இந்த பக்கவிளைவுகள் இருக்கு- உஷார்