முட்டை அதிகமா சாப்பிடாதீங்க! இந்த பக்கவிளைவுகள் இருக்கு- உஷார்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சத்தான உணவுகளில் முட்டை முக்கியமான ஒன்று.
நம் உடலில் மிக அதிகளவில் கிரகித்துக்கொள்ளும் 6 கிராம் அளவுக்கு புரதச்சத்து முட்டையில் நிறைந்திருக்கிறது.
மஞ்சள் கருவில் உள்ள விட்டமின் டி எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு சேர்க்கிறது, முட்டையிலுள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற கரோட்டினாய்டுகள், கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைக்கிறது.
இப்படி பல நன்மைகளை தன்னுள் கொண்டிருந்தாலும் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது ஆபத்தான பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.
சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நடக்கும் அற்புதங்கள்!
அது என்னவென்று பார்க்கலாம்,
* ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகளை தாராளமாக சாப்பிடலாம், ஆனால் இதை விட அதிகமாக உட்கொள்ளும் போது முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும், ஏனெனில் இது உங்களது கொலஸ்ட்ராலை அதிகரிக்ககூடும்.
* சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது சர்க்கரையின் அளவும் அதிகரித்துவிடும், இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
* மேலும் முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல என கூறப்படுகிறது.
* முட்டைகள் உடல் எடையை நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும், அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடையை அதிகரித்துவிடும்.
* அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை வரலாம்.
தொப்பையை சட்டென கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்! இப்படி எடுத்து கொண்டாலே போதும்