மழை காலத்தில் நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது? இதை கட்டாயம் செய்திடுங்க
மழைக்காலங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், இந்நேரத்தில் பரவு நோய்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே நோய்களும் வரிசையாக நம்மை தாக்க ஆரம்பித்து விடுகின்றது. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் யாரெனில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான்.
குறிப்பாக நீர் மற்றும் காற்று மூலம் நோய்கள் பரவுகின்றது. இந்நிலையில் மழைக்காலங்களில் காய்ச்சல், குடல்நோய், மூச்சுப்பை சிரமங்கள், டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுகின்றது.
நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது?
உணவு சமைக்கும் முன்பு, சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்ற பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இதனால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
இதே போன்று மழைகாலங்களில் தண்ணீர் மூலமாகவும் நோய்கள் அதிகமாக பரவுகின்றது. ஆம் தண்ணீரில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் காணப்படும் என்பதால், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும்.
கொசுக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு வலைகள், கொசு விரட்டிகளை பயன்படுத்தி வீட்டிற்குள் கொசு வராமல் தடுக்கவும். மேலும் மழைநீர் வீட்டைச் சுற்றிலும் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுவினால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பாதிக்கக்கூடும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சமைக்க வேண்டும். வெளியே இருந்து உணவுகளை வாங்கி சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும்.
நாம் அணியும் உடைகளை நன்றாக காய வைத்த பின்பே அணிய வேண்டும். ஈரமான துணிகளை நாம் அணிவதால், சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். இதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் நம்மை தாக்கும்.
Photo by MediElaj
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |