Rainbow Mountain: கண்களுக்கு விருந்தளிக்கும் வானவில் மலைத்தொடர்
நாம் கண்டு களிக்காத பல சுற்றுலா தலங்கள் இருக்கிறது. அதிலும் நம்மை ஆச்சரியப்படுத்தகூடிய பல சுற்றுலா தலங்கள் நாம் அறியாதவையாக இருக்கும். அப்படியான ஒரு சுற்றுலா தலம் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பொதுவாக சீனா என்று கூறினாலே உங்களுக்கு தெரியும் அங்கு சுற்றுலாத் தலங்கள் 100 ற்கும் மேற்பட்டவை இருக்கின்றது என. அந்த சுற்றுலா தலங்களுள் ஒன்று தான் வானவில் மலைத்தொடர்.
இது பார்ப்பதற்கு வானவில் போன்று காட்சி அளிக்கும் இது பற்றிய இன்னும் விரிவான தகவல்களை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
வானவில் மலைத்தொடர்
நாம் பல மலைத்தொடர்களை பார்த்திருப்போம். அவை எல்லாம் கரடு முரடாக பனி பொழிந்து காணப்படும் பச்சை நிறத்தில் காணப்படும். இல்லை என்றால் காடுகள் சூழ கண்டிருப்போம்.
ஆனால் இந்த மலைத்தொடர் வானவில் நிறத்தில் காணப்படுகின்றது. இது "ரெயின்போ மவுண்டன்" என்று அழைக்கப்படுகின்றது. இந்த மலைத்தொடர் சீனாவின் வடமேற்கில் உள்ள கன்சு மாகாணத்தில் 200 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது.
இது 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாறியது. இதற்கு பின்னர் தான் உலக சுற்றுலா தலமாக இது மாறியது. இந்த இடம் மலைகள் மற்றும் பாறை அமைப்புகளில் வண்ணங்களின் அற்புதமான காட்சிக்கு புகழ்பெற்றது.
இந்த இடம் இப்படி உருவாக காரணம் இந்த இடம் சுமார் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலின் ஒரு பகுதியாக இருந்தது.
டெக்டோனிக் தட்டு மோதலின் விளைவாக நிலம் மடிந்து மலைகளை உருவாக்கியது, பின்னர் அது கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்தது.
பின்னர் இங்கே ஆறுகள் உருவானபோது, செங்கற்கள் படிந்தன. செங்கற்களின் மீது மண் பாறை படிந்ததால் நிலம் ஒரு படுகையில் மூழ்கடித்தது .
பல்வேறு படிவு பாறைகள் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன, அவை மண் மற்றும் கல்லில் வெவ்வேறு அளவு இரும்பு உப்பைக் கொண்டிருந்தன.
அதனால்தான் அடுக்குகள் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. இந்த இடத்திற்கு நகர பேருந்தில் சென்றால் மிகவும் நல்லது. சீனாவிற்கு சென்றால் கட்டாயம் இந்த இடத்தை மறக்காதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |