ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சிய உலகின் உயரமான பாலம் எங்குள்ளது தெரியுமா?
உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்று சிறப்பை பெறும் செனாப் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஈபிள் டவரை விட அதிக உயரம் கொண்டதாக அதாவது 1,178 அடி உயரத்தில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது.
ஈபிள் டவரின் உயரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்ட செனாப் மேம்பாலத்தின் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செனாப் பாலம்
ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர். இந்த உயரம் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம்.
இந்த பாலம் கட்ட 93 அடுக்குப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொங்கன் ரயில்வே ஒவ்வொரு அடுக்குப் பிரிவின் எடை 85 டன்கள்.
இந்த பாலம் வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தை எதிர்க்கும் என்றுக் கூறப்படுகிறது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டது.
இதில், ஐஐடி, டிஆர்டிஓ, இந்திய புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
111 கி.மீ. நீளமுள்ள கத்ரா-பனிஹால் பகுதி தயாரானவுடன், இந்தப் பாலம் ரயில்களின் இயக்கத்திற்காக இந்த ஆண்டே திறக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் கட்டுமான செலவு ரூ.14,000 கோடி என தெரிவிக்கப்படுகின்றது.2004 ஆம் ஆண்டே இந்த பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டாலும் பல தடைகளை தாண்டி தற்போதுதான் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |