விலங்குப்பிரியரா நீங்கள்? அப்போ யால தேசிய பூங்காவை மிஸ் பண்ணாதீங்க
நமது நாட்டில் நமக்கு தெரியாத அளவில் சுற்றுலா இடங்கள் பல இருக்கின்றன. இதை பார்க்கச் செல்வதால் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கின்றன.
இப்படி அழகான இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக இருப்பது யால தேசிய பூங்காவாகும். இந்த பூங்கா இலங்கை வாழ் மக்களுக்கு மிகவும் பிடித்த பூங்காவாகும்.
பல சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை பார்வை இட்டுச் செல்வது அதிகம். இந்த பூங்காவில் பார்வை இட இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யால தேசிய பூங்கா
இந்த யால தேசிய பூங்கா ஊவா & தெற்குப் பகுதி என இரண்டிற்கும் இடையில் காணப்படுகின்றது. இதில் 97,880.7 ஹெக்டேர், ஈரப்பதமான மழைக்கால வனப்பகுதியிலிருந்து பல்வேறு இயற்கை பெட்டிகள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது.
இந்த சுற்றுலா தலம் 1938 பிப்ரவரி 25 திகதி தேசிய பூங்காவாக வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டது. இது ஒரு தீவாகும் இங்கு அழகான பெனாப்ளேனில் அமைந்துள்ளது.
இங்கு மழைக்காலம் வடகிழக்கு பருவமழை என்பன அக்டோபர் முதல் ஜனவரி வரை நிகழ்கிறது. எனவே இந்த இடத்தை பார்வை இட நீங்கள் முதல் மாதத்தை கடந்தவுடன் செல்வது பயன் தரும்.
இங்கு யானைகளின் கூட்டம் தண்ணீரில் உல்லாசமாக இருப்பதையும், மரங்களில் பறவைகள் கீச்சிடுவதையும், சிறுத்தைகள் சோம்பேறித்தனமாக சுற்றித் திரிவதையும் நீங்கள் கண்டு கழிக்கலாம்.
பச்சை பசேலென்ற வனப்பகுதியை பார்க்கும் போது மனதில் ஒரு விதமான நிம்மதி கிடைக்கும்.
இதை பார்வைஇடச் செல்பவர்கள் இயற்கையின் மத்தியில் பூக்காவில் ஓய்வெடுக்கலாம். விலங்குப்பிரியராக இருந்தால் இந்த இடம் கட்டாயமாக மகிழ்ச்சி தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |