மேகம் நீர்த்துளிகளாய் மண்ணில் எழுதும் காதல் கவிதை ”மழை”
மழையை பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் மழை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும்.
அனைத்து உயிரினத்துக்குமே மழை என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது. தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு, மனிதர்களுக்கு, பிராணிகளுக்கு என ஒவ்வொரு உயிரினத்துக்குமே மழை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது.
மழையானது கடல் நீரிலிருந்து உற்பத்தியாகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெப்பமான சூழ்நிலையில், கடல் நீரானது, நீராவியாக மாறி வானத்துக்குச் சென்று, பின்பு வானத்தை அடைந்ததும் நீராவி மேகமாக மாறிவிடுகிறது.
மழை நமக்கு எவ்வளவு நன்மைகளைத் தருகிறது. அதனால் நாம் அதன் பயன்பாட்டை அறிந்து நடந்துகொள்ள வேண்டும்.
அதுவும் மக்களின் பசியைப் போக்கும் விவசாயத்தில் இந்த மழையானது பெரிதும் சேவையாற்றுகிறது. மக்களின் பசியைப் போக்கும் விவசாத்துறையே இந்த மழையை நம்பித்தான் இருக்கின்றதென்றால், இந்த மழை எவ்வளவு பெறுமதி வாய்ந்தது.
ஐம்பூதங்களில் ஒன்று நீர். அந்த நீரை வாரி வழங்குகின்றது மழை. உலகில் நீர் இல்லாமல் ஒருவராலும் வாழ முடியாது. மழை நீரை சேகரித்து பல்வேறு வேலைகளுக்கும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அதிக வெப்பமான காலங்களில் எப்போது மழை பெய்யும் என்று ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருப்போம்.
மழை பெய்யும்போது அதிலிருந்தும் வெளிவரும் மண்வாசனையானது, அனைவரையும் ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.
மழை பெய்யும்போது அனைவருக்கும் ஒருவித பூரிப்பையும் சந்தோஷத்தையும் சேர்த்தே கொண்டு வந்துவிடுகிறது.
இயற்கை நமக்கு எவ்வளவோ கொடைகளைக் கொடுத்திருக்கிறது. அதில் மிக மிக முக்கியமான ஒன்று என்றால் அது மழை தான்.
மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் அந்த மழையில் துள்ளிக் குதித்து விளையாடினால் எப்படி மனம் ஆனந்தமடையும் அவ்வாறு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது இந்த மழை.
மழை பற்றிய சில வரிகள்...
- எங்கு எதை தொலைத்ததோ தெரியவில்லை இந்த வானம்...இப்படி கண்ணீர் வடிக்கிறதே மழையாக!
- கார்மேகம் பிழிந்தெடுத்து, மை திரட்டி,இறைவன் எழுதிய கவிதையோ மழை!
- முத்துக்கள் விழும் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன், சிதறியது முத்துக்கள் அல்ல மழைத்துளிகள்!
- மழைக்கு ஒரு வாசல் உண்டு, வாசலிலே அது விழுவதுண்டு, இருந்தாலும் அனைவராலும் இரசிக்கப்படுவதுண்டு!
- வானம் மனம் குளிர்ந்து, தன் நேசமான உறவான பூமிக்கு பரிசாக அளிக்கும் அதிசய விந்தையே மழை!
- மழையே! மெல்ல மண்ணில் விழுந்து, எழுந்து உயிருடன் கலந்தாய்! பல விவசாயிகளின் உயிரைக் காத்தாய்!
- மேகம் நீர்த்துளிகளாய் மண்ணில் எழுதும் காதல் கவிதை மழை!
- மழையே! மழையே! நீராவியாய் எழுகிறாய். வானம் மத்தளம் இசைக்க, என் வீட்டு கூரையில் இசையாய் விழுகிறாய் நீ!
- சிலுசிலுவென பொழிகின்றாய்! சிறு துளியாய் விழுகின்றாய்.
- கார்மேக கூட்டத்தில் பூத்த கண்ணாடி பூ மழை!
- மழையை ரசிப்பது ஆனந்தம் என்றால் மழையில் நனைவது பேரானந்தம் தானே!
- மழையே மழையே! கண்ணாடி பூக்களாய் மண்மீது உடைகின்றாய். கண்மூடி திறக்கும் முன்னே காணாமல் மறைகின்றாய்.