கேன்சருக்கு இதை விட்டால் வேறு மருந்து இல்லை!
பொதுவாக நாம் சுவைக்காகவும் மணத்திற்காகவும் பயன்படுத்தும் குடை மிளகாயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், குடை மிளகாய்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Apigenin, lupeol, luteolin, quercetin மற்றும் capsiate உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த மிளகாய்கள் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். நிறங்களை போலலே இதன் ஊட்டசத்துக்களும் நிறத்திற்கு நிறம் மாறுப்படுகின்றது.
அந்த வகையில் குடை மிளகாய்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
குடை மிளகாய் செய்யும் மருத்துவ வித்தைகள்
1. கண்களின் ஆரோக்கியம்
குடை மிளகாய்களை நாம் உணவில் சேர்த்து கொள்வதால் கண்களுக்கு ஆரோக்கியமும், பிரகாசமும் கிடைக்கின்றது. மேலும் இதில், கரோட்டினாய்டுகளான Lutein மற்றும் zeaxanthin-கள் உள்ளன. இதனால் குடை மிளகாய் வகைகளை பயமின்றி நாம் எடுத்து கொள்ளலாம்.
2. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன
ஃபிளாவனாய்ட்ஸ் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் குடை மிளகாய்களில் அதிகம் உள்ளன. இதனால் எமக்கு ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
மேலும் குடை மிளகாய்களின் ரிச்சான சிவப்பு நிறத்திற்கு Capsanthin தான் காரணம். இந்த பதார்த்தம் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது UVA மற்றும் UVB ஆகிய சேதங்களிலிருந்து எம்மை பாதுகாக்கின்றது.
3.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
குடை மிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நோய் அபாயத்தை குறைக்கின்றது.
4. கேன்சர் அபாயம் குறையும்
குடை மிளகாய் சாப்பிட்டால் கேன்சர் வராது என மருத்துவர்கள் கூறுவார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Apigenin, lupeol, luteolin, quercetin மற்றும் capsiate உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இதனால் புற்றுநோய் நம் கிட்டக் கூட நெருங்காது.
5. இதய ஆரோக்கியம்
குடை மிளகாயில் இருக்கும் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து எம்மை பாதுக்காகின்றது.
மேலும் குடை மிளகாயில் இருக்கும் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் Homocysteine-ன் லெவலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.