பிரபுதேவா மாதிரி இருப்பதால் விக்கியை காதலித்தாரா நயன்தாரா? சர்ச்சையை கிளப்பிய நடிகர்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் பிரபுதேவா மாதிரி இருந்ததால் காதலித்தார் என்று அவருடன் நானும் ரௌடி தான் படத்தில் நடித்த ராகுல் தாத்தா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஜோடிகள் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், புகைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
நயன்தாராவின் காதல் தோல்வி
திருமணத்திற்கு முன்பு நயன்தாரா நடிகர் சிம்பு மற்றும் பிரபுதேவாவைக் காதலித்ததும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததும் ரசிகர்களுக்கு தெரிந்த விடயமே.
பின்பு போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்கி, இரண்டாவதாக நானும் ரௌடி தான் என்ற படத்தை இயக்கினார். அப்பொழுது அப்படத்தில் நடித்த நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபுதேவா போன்று இருப்பதால் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் மீது காதல் வந்தது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் தாத்தா.
ராகுல் தாத்தா கூறியது என்ன?
நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா. இவரது உண்மையான பெயர் ராகுல் இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி சீசன் 3யிலும் ராகுல் தாத்தா போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது நயன்தாரா விக்கி குறித்து இவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நானும் ரௌடி தான் படத்தில் தான் நயன்தாராவுடன் நடித்த அனுபவத்தை இந்த படத்தின் மூலம் தான் பிரபலமானதையும் கூறினார்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா காதலுக்கு ஏற்பட்டதற்கு காரணமே நான் தான் என்றும் விக்னேஷிடம் சென்று நீங்கள் ஒரு சயலாக பிரபுதேவா போலவே இருக்கிறீர்கள் என்று சொல்வேன்.
நயன்தாராவிடம் சென்று அவர் என்ன பிரபுதேவா மாதிரி இருக்கிறார் என்று பேசுவேன். இருவரும் படப்பிடிப்பில் தனது வேலையைக் கவனித்து வந்த நிலையில், பின்பு காதல் ஏற்பட்டு, தற்போது திருமணம் செய்துள்ளார்கள்.
இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் தான் நினைப்பதாகவும் ராகுல் தாத்தா கூறியுள்ளார்.