6 நடிகைகளை ஏமாற்றிய பிரபுதேவா? பரபரப்பை ஏற்படுத்திய சினிமா தகவல்
நடிகர் பிரபுதேவா 6 ஹீரோயின்களை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபுதேவா நடித்த ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’பஹிரா’ என்ற படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு நாயகிகள் நடிக்கின்றனர்.
இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.