இன்னும் 6 நாட்களில் திறக்கப்போகும் அதிர்ஷ்ட கதவுகள்- ராகு நட்சத்திர பெயர்ச்சியால் லாபம் பெறும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது.
இந்த ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி கொள்வார். அதிலும் குறிப்பாக ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி நகரும் சிறப்பம்சம் கொண்டவர்.
வக்ர நிலையில் இருப்பதால் ராகுவிற்கு பெரிதாக சக்தி இல்லை என பலரும் நினைப்பார்கள். மாறாக ராகுவின் பெயர்ச்சியால் ஒருவர் அதிர்ஷ்டம் பெற்று விட்டால் அது நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
இதன்படி, ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு 2025 ஜனவரி 12 ஆம் தேதி ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியான சனி பகவான். ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதிலும் சில ராசிகளுக்கு மாத்திரம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் ராகு பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிப்புரியும் இடத்தில் வழக்கத்திற்கு மாறாக முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ராகுவின் ஆசியால் நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் நிறைவேறும். |
கடகம் | கடக ராசியில் பிறந்தவர்கள் ராகு நட்சத்திர பெயர்ச்சியால் அவர்களின் வாழ்க்கையில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் பெறுவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாற ஆரம்பிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் நல்ல விடயங்கள் காதிற்கு வந்து சேரும். அதிலும் குறிப்பாக உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இதனால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல உயர்வை பெறுவார்கள். வருமானம் அதிகரிப்பதால் நிறைய பணம் கையில் இருக்கும். சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். |
சிம்மம் | ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பல வழிகளில் நன்மைகள் வந்து சேரும். அதிலும் குறிப்பாக வியாபாரிகளாக இருந்தால் நல்ல இலாபம் கிடைக்கும். வெளியில் புதிய ஒப்பந்தங்கள் போட வேண்டிய நிலை ஏற்படும். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர்வு தேடி வரும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இதனால் உங்களின் வேலையில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).