சௌந்தர்யாவுக்கு திருமணம்- தேதி குறித்த மாப்பிள்ளை.. நல்ல செய்தியுடன் வெளியேறும் போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யாவின் திருமணம் தேதியை அவருடைய காதலர் ஓபனாக வெளியில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு வித்தியாசமானடாஸ்க்களை பிக்பாஸ் கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள 2 பேர் வெளியேற்றப்பட்டு புதிதாக 2 பேர் ரீபிளேஸ் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்து வந்தன. இதனால் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டான போட்டியாளர்களில் யார் வந்தால் நன்றாக இருக்கும் யார் வரக்கூடாது என்பது குறித்த விளையாட்டும் நடத்தப்பட்டது.
அதில், பலரும் வர்ஷினி உள்ளே வந்தால் நன்றாக இருக்கும். அத்துடன் சில போட்டியாளர்கள் உள்ளே வரவே கூடாது என்றும் தீர்மானித்தார்கள்.
இந்த நிலையில், இன்றைய தினம் சுனிதா, வர்ஷினி, அர்ணவ் உட்பட மொத்தமாக 8 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். இவர்களில் உள்ளே வந்த சுனிதா மற்றும் வர்ஷினி இருவரும் இதுவரையில் பார்க்காத ஒரு டுவிஸ்ட்டை கொண்டு வந்துள்ளனர்.
திருமண தேதியுடன் காத்திருக்கும் விஷ்ணு
இது ஒருபுறம் சென்றுக் கொண்டிருக்கையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் மனம் திறந்து பேசிய விஷ்ணு,“ நாங்கள் இருவரும் பிக்பாஸ் மூலம் தான் காதலர்களாக மாறியுள்ளோம்.
வெளியில் வந்தவுடன் காதலர்களாக கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு, அதன் பின்னர் இந்த வருடத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்வோம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் சேர்ந்து திருமணம் செய்து கொண்ட ஜோடியாக நாங்களே இருக்க வேண்டும். சௌந்தர்யா எப்படி விளையாடுகிறார் என்று கேட்டால் என்னால் பதிலளிக்க முடியவில்லை.
அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர், டைட்டில் வின் பண்ண வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவரால் முடிந்தவரை விளையாடுகிறார். எபிசோட் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க..” என பேசியிருக்கிறார்.
இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “சௌந்தர்யாவுக்கு அப்போ திருமணமா?” என சோகமாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |