ராகு, கேது நட்சத்திர மாற்றம்.... 4 ராசியினர் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் தான்
ராகு, கேது நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற இருக்கும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ராகு, கேது நட்சத்திர மாற்றம்
நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படும் ராகு, கேது இவற்றின் ஒவ்வொரு அசைவுகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிட்ட மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் தற்போது பயணித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் ஒரே நாளில் தங்களது ராசியினை மாற்ற இருக்கின்றனர்.
இந்த நட்சத்திர பெயர்ச்சியானது வரும் 29ம் தேதி நடக்க உள்ளது. ராகு சதயம் நட்சத்திற்கும், கேது மகம் நட்சத்திற்கும் செல்லவுள்ள நிலையில், இந்த கிரக மாற்றத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ராகு மற்றும் கேது இரு கிரகங்களும் ஒரே நேரத்தில் நட்சத்திரத்தினை மாற்றுவதால், மேஷ ராசிக்கு நன்மைகள் ஏற்படுகின்றது. செலவுகள் குறைந்து எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும்.
ஆரோக்கிய பிரச்சனை நீங்குவதுடன், உங்களது பேச்சு அனைவரையும் கவருமாம். திடீர் பயணங்களால் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. மேலும் பணி செய்யும் இடத்தில் புதிய பொறுப்பு, மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது பல மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த காலத்தில் கடன் பிரச்சனை நீங்கி, நிதி நிலைமை வலுப்பெறுவதுடன், வாழ்க்கை துணையுடனான புரிதல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தினைக் காண முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி சாதகமான நிலையை உருவாக்குவதுடன், தொழில் தொடர்பான பிரச்சனை தீர்ந்து லாபம் கிடைக்கும்.
வணிகத்தை விரிவாக்கம் செய்ய இது நல்ல தருணமாகும். புதிய வருமானத்திற்கு வழிகள் கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கவும், பணத்தை சேமிக்கவும் முடியும்.

மீனம்
இந்த நட்சத்திர பெயர்ச்சி மீன ராசியினரின் வாழ்க்கையில் நிதி நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. வங்கி இருப்பு அதிகமாகுமாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு நீங்குமாம், வெளிநாட்டிற்கு பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |