ராகு பகவானுக்கு பிடித்த 4 ராசிகள்... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் சில ராசிகள் பிடித்தமானவையாக இருக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு கிரகங்களின் நிலையால் அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்து சாதகமாக இருக்கும்.
அந்த வகையில், ராகு பகவானுக்கு 4 ராசிகள் பிடித்தவையாக இருக்கின்றன. ராகு பகவான் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார்.
ராகு பகவான் மே 18ஆம் தேதி கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதற்கிடையில், மார்ச் இறுதியில் ராகு பகாவன் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலையில், ராகு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

மேஷம்
ராகு பகவானுக்கு மேஷ ராசியினிரை மிகவும் பிடித்தவையாக உள்ளன. ராகு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு எந்த குறையும் பார்த்துக் கொள்வார். இவர்களுககு தொழில், வேலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்பாராத வெற்றிகள், லாபம் கிடைக்கும். மேலும், பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள், பணி உயர்வு போன்றவை ஏற்படக் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்
ராகு பகவானின் அருள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இதனால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். ராகுவின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால், தொழில், வேலையில் வெற்றி பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

மகரம்
ராகுவுக்கு மிகவும் பிடித்த ராசியாக மகரம் இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ராகு நல்ல பலன்களை கொடுப்பார். இவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை மட்டும் ராகு பகவான் கொடுப்பார். கூட்டுத் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். திருமண தடைகளும் நீங்கி, ராகுவின் அருளால் நல்ல வரன் உங்களுக்கு இருக்கும். மேலும், உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

கடகம்
ராகுவால் எப்போது நீங்கள் சாதகமான பலன்களை பெறுவீர்கள். கஷ்டங்கள் தீரும். ராகுவின் அருளால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக, உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும். உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |