இதுநாள் வரை நீங்கள் பார்த்திராத ராகவா லோரன்ஸின் திருமணம் புகைப்படம்!
நடிகர் ராகவா லாரன்ஸின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ராகவா லாரன்ஸ்
சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். சிறு வயதில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து சினிமாவில் சிறிய சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து படிப்படியாக முன்னேறியவர் லாரன்ஸ்.
லாரன்ஸின் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டது.
அண்மையில் இவரின் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியாகியிருந்தது, மேலும், சந்திரமுகி 2 , அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
லாரன்ஸ் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்தில் ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கப்படுகிறார். ஏனெனில் தான் சம்பாதித்த பணத்தில் காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றார். அதுமட்டுமில்லாமல் ஆதரவற்றவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் பல உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்.
இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகனும் ஆவார். மேலும் தனது தாயின் மீது கொண்ட அதீத அன்பால் அவருக்கு கோயில் ஒன்றையும் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண புகைப்படம்
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ராகவா லாரன்ஸின் திருமணப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ராகவா லாரன்ஸ் லதா என்றப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ராகவி என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
இவர் பெரிதாக மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை வெளியிடுவதில்லை. ஆனால் தற்போது இவரின் திருமண புகைப்படம் சிக்கியவுடன் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.