கருப்பு சேலையில் மின்மினிப் பூச்சியாக நடந்து வந்த பவானி சங்கர் - வைரலாகும் வீடியோ!
கருப்பு சேலையில் மின்மினிப் பூச்சியாக நடந்து வந்த பவானி சங்கர் வீடியோ! சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா பாவனி சங்கர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர்.
கடந்த 2017ம் ஆண்டு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா: அத்தியாயம் போன்ற உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும், கடந்த மாதம் உலகமெங்கும் வெளியான சிலம்பரசனின் பத்து தல படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
கமலஹாசனின் இந்தியன் 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் இவர் இணைந்துள்ளார். அதிலும் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக இருக்கும் ருத்ரன் படத்தின் பட ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
வைரலாகும் பவானி சங்கர் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கருப்பு சேலையில், மின்மின் பூச்சியாக பவானி சங்கர் கொள்ளை அழகில் நடந்து வருகிறார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.