சிறுவனின் காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்! எதற்காக இந்த திடீர் முடிவு?
பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் தான் உதவி செய்பவர்களின் காலில் இனி விழுந்த பின்பே உதவி செய்வதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ்
பிரபல நடன இயக்குனராக இருந்து தற்போது முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் மாறி உள்ளார். ராகவா லாரன்ஸ் இவர் இயக்கிய முனி சீரிஸ் படங்கள் ராகவாவிற்கு நல்ல கை கொடுத்தது.
தற்போது ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தில் நாயகனாக கமிட்டாகி உள்ளார். பி வாசு இயக்கும் இந்த படத்தை வடிவேலுவும் உடன் நடிக்கிறார்.
படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றும் முயற்சிகள் இறங்கியுள்ள ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இது குறித்தான புகைப்படங்களை வெளியிட்டதோடு, தான் நடத்தி வரும் டிரஸ்டடுக்கு இனி யாரும் பண உதவி செய்ய வேண்டாம். தான் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், தனது பணத்தை வைத்தே மக்களுக்கு உதவி செய்ய முடியும் என நம்புகிறேன்.
இதுவரை உதவி செய்த அனைவருக்கும் நன்றி. அனைவரையும் கட்டாயம் ஒரு நாள் சந்திக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
A CHANGE IN MY LIFE
— Raghava Lawrence (@offl_Lawrence) September 18, 2022
Whoever I help shouldn't fall at my feet, I will fall at their feet and do my service. #Serviceisgod https://t.co/eE4V7HogIB
உதவி வாங்குபவர்களின் காலில் விழுவேன்
ராகவா லாரன்ஸ் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு உதவி செய்வதில் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலைகள் தற்போது ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பில் புதிய முயற்சி குறித்து எழுதியுள்ளார்.
அதில், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி.
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்.
— Raghava Lawrence (@offl_Lawrence) September 18, 2022
இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன்.#சேவையேகடவுள் pic.twitter.com/YtfeIsKl1v