நடிகை ராதிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை... காரணம் என்ன?
நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையைக் குறித்து புகைப்படத்துடன் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராதிகா
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள் தான் ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் 1978-ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்பு முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தெரிவு செய்து நடித்து, உச்சத்தில் இருந்தார்.
திருமணத்திற்க்கு பின்னரும், குணச்சித்திர வேடத்தினை தெரிவு செய்து நடித்து வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடன் அம்மாவாகவும் நடித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி, சீரியல், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக வலம் வருகின்றார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ராதிகா வெளியிட்ட புகைப்படம்
இதுகுறித்து ராதிகா கூறுகையில், நடிகை ராதிகா இரண்டு படங்களின் லொகேஷனில் இருந்த போது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருந்துள்ளது.
பின்னர் என் வேளையில் ஒரு மராத்தான் ஓட துவங்கினேன். வலி நிவாரணிகள், முழங்கால் பிரேஸ், கிரையோதெரபி ஆகியவை அணிந்து வலியுடன் வேலை செய்தேன். நான் வலியால் துடித்தபோது எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு கடமைப்பட்டுள்ளேன்.
அதே போல் எதிர்பார்ப்புகள் இல்லை என் மிகப்பெரிய தூண், மற்றும் வலிமை தங்க இதயம் கொண்ட என் கணவர் சரத்குமார் ஒரு குழந்தையை போல என்னை கவனித்துக் கொண்டார் என்றும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், வலுவாக இருங்கள் என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |