ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி! ராதிகா மெர்ச்சண்ட் கையிலிருந்த குட்டி பேக் இத்தனை கோடியா?
அம்பானி மருமகள் 2ஆவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை மற்றும் பேக்கின் விலை பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அம்பானி
இந்தியாவிலுள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானியின் கடைசி மகனின் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு ஏற்பாடுகளும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆனந்த் அம்பானி - ராதிகா இருவருக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.
ஒரு குட்டி பேக் இவ்வளவா?
இந்த நிலையில் ராதிகா மெர்ச்சண்ட் அவரது இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை மற்றும் பேக் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், பிரான்சில் நடந்த 2 ஆவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் vintage pink Dior என்ற ஆடையை அணிந்திருந்தார்.
கடந்த 1959 ஆம் ஆண்டுகளில் கிறிஸ்டியன் டியோர்கள் அணிந்திருந்த ஆடைகள் போல் நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த ஆடை இந்திய மதிப்பின் படி ரூ 3,19,478 வரும் என கூறப்படுகின்றது. இதனை ஆடை நிபுணர், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான டோரிஸ் ரேமண்ட் வழங்கியுள்ளார்.
ராதிகா அணிந்த ஆடைக்கு ஏற்றால் போல் ஒரு குட்டி ஹாண்ட் பேக் வைத்திருந்தார். இந்த பேக் Hermes Kelly நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் இந்திய மதிப்பின் படி ரூ. (26,22,619) வரை இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |