இலங்கையர் Identity Card பெற முதலில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ
இலங்கையில் வாழும் பிரஜைகள் அனைவரும் அந்நாட்டின் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்த அட்டையை வைத்தே குறித்த நபர் இலங்கையரா? என்பதனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
மேலும் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாக கொண்டு தான் இலங்கையருக்காக அரசாங்கம் கொடுக்கும் அத்தனை சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.
இவ்வளவு சிறப்புக்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் தேசிய அடையாள அட்டையை இலங்கையர்கள் எப்படி பெற்றுக் கொள்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
1. விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதி
- இலங்கைப் பிரஜையாக இருக்கும் ஒருவர் 15 வயதை கடந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர்
- பாடசாலை மாணவர்களாக இருக்கும் பொழுது விண்ணப்பிக்கலாம்.
- 15 வயதை கடந்திருப்பவர்கள்.
- பெருந்தோட்ட குடியிருப்பில் உள்ளவர்கள்.
3. விண்ணப்பத்தை சான்று உறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்
- அதிபர் அல்லது பிரிவெனாதிபதி
- வசிக்கும் பகுதியில் பணியாற்றும் கிராம அலுவலர் (பிரதேச செயலாளரின் மேலொப்பம் கட்டாயம்)
- தோட்ட அதிகாரி
4. விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டியவை
- சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி./வி/1,7,8 விண்ணப்பப் படிவம்)
- மேலதிக மாவட்டப் பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்புப் பதிவேட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பு
- 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ICAO தரமுடைய புகைப்படம் (இணைப்பு)
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
5. கட்டண விவரங்கள்
விவரங்கள் | கட்டணம் |
முதற் தடவையாக தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் (புதிய கட்டண அறவீடு தொடர்பான அறிவித்தல்) | ரூ. 200.00 |
சாதாரண சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் தேசிய அடையாள அட்டையை அனுப்புவதற்கான கட்டணம் | ரூ. 120.00 |
15 வயதை எட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரருக்கான தண்டப்பணம் | ரூ. 2500.00 |
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19(2) இன் கீழ், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெறாத விண்ணப்பதாரருக்கு தண்டப்பணம் | ரூ. 2500.00 |
தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறை
1. சாதாரண சேவை
- அதிபர் அல்லது பிரிவெனாதிபதி மூலம் விண்ணப்பத்திருந்தால் மாகாண காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்ட பின்னர், தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
- கிராம அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டால் அந்தந்த பிரதேச செயலகங்களின் அடையாள அட்டை பிரிவு மூலம் விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை திணைக்கள கணினி அமைப்பிற்கு சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
2. ஒரு நாள் சேவை
ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டை பெற வேண்டும் என்றால் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு பத்தரமுல்லை தலைமை அலுவலகம் அல்லது காலி மாகாண காரியாலயத்திற்குச் சென்று சேவையைப் பெறலாம்.
முக்கிய குறிப்பு
மேற்குறிப்பிட்ட தகவல்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டவை மாத்திரமே. இது தொடர்பான மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் நீங்கள் வசிக்கும் கிராம அலுவலரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |