வயதிற்கு மூத்த பெண்களை ஆண்கள் விரும்ப காரணம் என்ன?
சில ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்கள் மீது காதல் கொள்வதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆண்கள்
குறிப்பிட்ட சில ஆண்கள் சில பெண்கள் மீது ஈர்ப்பாக இருப்பார்கள். இளம் ஆண்கள் தங்களுக்கு சமமான வயதுடைய பெண்கள் அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்களை, மூத்த பெண்களிடம் காண முடிகிறது.
மூத்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுவாக சில இயல்புகளை கொண்டிருப்பார்கள். அந்த பெண்கள் சிறிய விஷயங்களுக்கு சண்டை போட்டு அதை ஒரு பெரிய விஷயமாக ஆக்காமல் எந்த விதமான சந்தர்ப்பத்திலும் மெச்சூர்டாக நடந்து கொள்வதை எதிர்பார்கின்றர்.
இந்த குணம் கொண்ட பெண்களிடம் தாமாக ஈர்க்கப்படுகின்றனர். ஆண்களை விட மூத்த பெண்கள் கடினமான, சிக்கலான சூழலில் ஆண்களை சார்ந்து இருக்காமல் அல்லது ஆண்களின் உதவி கோராமல் எளிதாக சரி செய்து விடுவார்கள்.
மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் மெச்சூரிட்டி. அதே போல, மன முதிர்ச்சி அதிகம் இருப்பவர்கள் தான் மூத்தவர்களை விரும்புவார்கள். தன் மீதும், தன் திறமை மீதும் அதிகமாக தன்னம்பிக்கை கொண்டிருக்கும் ஆண்கள் தன்னை விட வயதான பெண்ணை காதலிப்பதை ஒரு பிரச்சனையாக கருதவே மாட்டார்கள்.
தன்னம்பிக்கையாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே வயதான பெண்களின் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருக்கும். இந்த ஆண்கள் சுதந்திரமாக இருப்பதை விரும்புவார்கள். தனிமையை விரும்பும் இவர்கள், மற்றவர்களுடன் ஜாலியாகப் பழகுவார்கள் அதாவது எந்த இடமாக இருந்தாலும், சூழலாக இருந்தாலும் இவர்கள் பழக தயக்கம் இருக்காது.
இந்த குணங்கள் தான், சுதந்திரமாக இருக்கும் மூத்த பெண்ணை நேசிக்கும் விருப்பத்தைத் தருகிறது. இந்த ஆண்கள் பரஸ்பரம் மரியாதை கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் மரியாதையாக நடப்பார்கள் மற்றவர்களையும் மரியாதையாக நடத்துவார்கள்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டென்று முடிவுகளை எடுக்காமல், சிக்கல்களை சரியாகப் புரிந்துகொண்டு இருவருக்கும் எது சரியாக இருக்கும் என்று யோசித்து மெச்சூர்டாக முடிவு எடுப்பார்கள்.
கோபம், சண்டை என்று எதுவாக இருந்தாலுமே அதை சரி செய்வதில் முயற்சி செய்வார்கள். இது போன்ற குணங்கள் சில ஆண்களிடம் இருப்பதால் தான் அவர்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |