மீண்டும் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ராதிகா... எதிர்பாராத திருப்பத்தால் பாக்கியா அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை அடுத்து ராதிகாவும் பாக்கியா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார்.
தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்திக்க உள்ளார்.
பரபரப்பு புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. கோபியை ஈஸ்வரி பாக்கியா வீட்டிற்கு வந்துள்ள நிலையில், கணவரை மீட்க ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.
குறித்த ப்ரொமோ காட்சியினால் சீரியலை அவதானித்து வரும் ரசிகர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். சீக்கிரம் முடிவிற்கு வராமல் இவ்வாறு இழுத்து அடிப்பது கோபத்தை ஏற்படுத்தி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |