கணவரை கைவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் சீரியல் நடிகை! சொன்னதை செய்தாரா? குழப்பத்தில் ரசிகர்கள்
கையில் குழந்தையுடன் ரக்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள காணொளியில் ரசிகர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது.
ரக்சிதா மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடர் மூலம் அறிமுகமானாவர் தான் ரக்சிதா மகாலட்சுமி.
இதனை தொடர்ந்து கவின் மற்றும் ரியோவுடன் இணைந்து சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நடித்து மீனாட்சியாக கிராமவாசிகளின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார்.
ரக்சிதா தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ரக்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கடந்த ஆண்டு பங்கேற்றார்.
அப்போது தன்னுடைய கணவர் குறித்தும் அவர்களின் பிரிவு குறித்தும் கூறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் குறித்து எந்த விதமான கருத்தையும் வெளியிடவில்லை.
குழந்தையுடன் குழந்தையாகிய ரக்சிதா
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவர் ஆபாச வார்த்தைகளால் மிரட்டினார் என பொலிஸாரிடம் பொய்யான புகார் அளித்து வசமாக சிக்கினார்.
இது ஒரு புறம் இருக்கையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரக்சிதா, குழந்தையுடன் கொஞ்சு விளையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த குழந்தையுடன் ரக்சிதாவை பார்த்த இணையவாசிகள், “விவாகரத்து என்ற செய்தி பரப்பி விட்டு பிக்பாஸ் வீட்டில் கூறிய போல் குழந்தையை தத்தெடுத்து வீட்டீர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலும் குழந்தை குறித்தும் அது யாருடையது என்றும் ரக்சிதா சார்பில் எந்தவிதமான கருத்துகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |