ரக்சிதா- தினேஷ் விவாகரத்தில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபர்..! கொந்தளிக்கும் கணவர்
பிரபல சின்னத்திரை நாயகி ரக்சிதா மகாலட்சுமி தன்னுடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடித்து பிரபலமாகியவர் தான் ரக்சிதா மகாலட்சுமி. இவர் “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரக்சிதா பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்ட போது இருவரும் பிரிந்திருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்கும் போது இருவரும் பேசிக் கொண்டார்கள். அதனால் வெளியில் சென்ற பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
மூக்கை நுழைக்கும் டப்பிங் ஆர்ட்டீஸ்
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் தன்னை மிரட்டுவதாகவும் தொந்தரவு செய்வதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பின்னர் ரக்சிதா இன்ஸ்டாகிராமில், “நீங்கள் அமைதியாக இருக்கும்போது, எப்போது தாக்குவார்கள் என்று மக்களுக்குத் தெரியாது” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து “வலிமையாக இருப்பது மட்டுமே எஞ்சியுள்ள ஒரே வழி” என்றும் குறிபிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து டப்பிங் கலைஞர் ஜி.ஜி சில முறைப்பாடுகளை காவல் நிலையத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான விசாரனையில் தினேஷ்,“ ஜிஜி விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், அவரைச் சந்தித்து விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்தவர்கள் குடும்ப விடயங்களில் தலையீடுபவர்களுக்கு சரியான பாடத்தை நான் காட்டுவேன் என்றும் தினேஷ் சவால் விட்டுள்ளார்.