போலிஸாருக்கே நடிப்பை காட்டிய ரக்சிதா.. பயில்வானால் வெளிச்சத்திற்கு வரும் விவாகரத்து நாடகம்!
சின்னத்திரை நடிகை ரக்சிதா மகாலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்கள்.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் நாயகியாக நடித்து பிரபலமாகியவர் ரக்சிதா மகாலட்சுமி. இவர் பெங்களூரை சேர்ந்தவர்,
இதனை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி” என்ற தொடரிவல் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் மீனாட்சியாக மாறி விட்டார்.
தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல நாட்கள் இணைந்து வாழ்ந்த ரக்சிதா - தினேஷ் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
பொய்யான புகார் அளித்து மாட்டிய ரக்சிதா
இந்த நிலையில், கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வாயை திறக்காத ரக்சிதா, வெளியில் வந்தவுடன் பொய்யான குற்றச்சாற்று ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், தன்னுடைய கணவர் ஆபாச வார்த்தைகள் பேசி தன்னை மிரட்டியதாக கூறியிருந்தார்.
குற்றச்சாட்டை விசாரித்த போலீசார், தினேஷை அழைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த பிரச்சினையை சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார்.
அதில், அவள் விவாகரத்து கேட்டா நான் கையெழுத்து போட்டு தரேன் என்றேன். பின்னர் சந்தேகத்தில் ரக்சிதாவின் செல்போனை சோதனை செய்த பொலிஸார் இது பொய்யான குற்றச்சாற்று எனக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தால் கடுப்பான பொலிஸார் ரக்சிதாவை எச்சரித்ததாக கூறப்படுகின்றது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |