தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த நெகிழ்ச்சியான காரியம்.... - பார்த்திபன் புகழாரம்...!
தந்தை இறந்த துக்கத்தில் நடிகர் அஜித் செய்த நெகிழ்ச்சியான காரியத்தை குறித்து நடிகர் பார்த்திபன் புகழ்ந்து டுவிட் செய்துள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் போராடி முன்னுக்கு வந்தவர் அஜித்.
இவர் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கவே இல்லை. இதனையடுத்து, டெக்ஸ்டைல் தொழிலில் நுழைந்தவர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாடலிங்கில் நுழைந்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் நடிகர் அஜித் அதிக ஆர்வம் கொண்டவர். பல ரேஸ்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.
அஜித் தந்தை மரணம்
நேற்று நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் உயிரிழந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவிற்கு, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.
மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது https://t.co/nQXnClzNs2
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 24, 2023