ராணி உடல் புதைக்கப்படும் நாளில் மட்டும் இத்தனை கோடி செலவா? இளவரசர் திருமணத்தை விட அதிகம்
வரலாற்றிலேயே முதல் முறை பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு பல கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட உள்ளது.
19ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில் அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டும் ஆகவுள்ள செலவுகள் குறித்த ஒரு வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் திகதி காலமானார். அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது.
அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.
இதையடுத்து வரும் 19-ம் திகதி அன்று ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

இத்தனை கோடி செலவா?
ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு வருகை தரவுள்ளனர்.
எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் நடக்கும் தினத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டும் தோராயமாக ரூ. 269 கோடி (இலங்கை மதிப்பில்) (USD 7.5 மில்லியன்) நிதி செலவிடப்படுகிறது.

இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, பிரிட்டன் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை பிரித்தானிய காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளிலேயே இது மிகப்பெரிய சவாலான பணி என்றும் அது தெரிவிக்கிறது.
இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும்.
நாட்டின் காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.
மற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது பெரும் செலவாகும் என கருதப்படுகிறது. கடந்த 2011ல் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்தது.
வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.