இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் தங்கமும், பணமும் மூட்டை மூட்டையாக சேரும்!
பணத்தை ஈர்ப்பது என்பது நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீண் செலவு ஆகாமல் உங்களிடம் தங்குவது.
அதோடு மேன்மேலும் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைப்பது மற்றும் உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகாமல் உடனே கிடைப்பது.
முக்கியமாக உங்களை நோக்கி அடிக்கவிக்கும் அதிர்ஷ்டம் தடையின்றி கிடைப்பது ஆகும்.
இப்போது பணத்தை ஈர்க்க உதவும் அந்த இரண்டு பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
மாதுளை குச்சி மற்றும் மல்லிகை
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டின் தென்மேற்கு திசையில், வடக்கு திசையை நோக்கி வைப்பது மிகவும் நல்லது.
அதோடு நீங்கள் பணம் வைக்கும் போது, அத்துடன் ஒரு சிறிய துண்டு மாதுளை குச்சியையும் வையுங்கள்.
அதனுடன் சிறிது மணம் நிறைந்த மல்லிகை பூவையும் வையுங்கள்.
மல்லிகை
பூக்களில் மிகவும் வாசனை நிறைந்த பூ என்றால் அது மல்லிகை தான். நல்ல மணமுள்ள மல்லிகைப் பூ மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும்.
இந்த மல்லிகையை பணத்துடன் சேர்த்து வைக்கும் போது, அங்கு பணம் குறையாமல் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.
மாதுளை
குச்சி மாதுளையின் குச்சி மகாலட்சுமி அம்சம் பொருந்தியது என்று கூறுவார்கள். எனவே மாதுளை மரத்தில் இருந்து சிறு குச்சியை உடைத்து வந்து, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள் .இதனால் பணம் வைக்கும் இடத்தில் பணம் பெருகும் சக்தி அதிகரிக்கும்.
நகை அதிகம் சேர வேண்டுமா?
மாதுளை குச்சி பணம் அதிகம் சேர மட்டுமின்றி, நகைகளையும் அதிகம் சேர வைக்கும். அதற்கு நீங்கள் நகை வைக்கும் பெட்டியில் மாதுளை குச்சியை மட்டும் வையுங்கள்.
இதனால் நகை அதிகம் சேர்வதோடு, நகைகளை விற்கும் நிலைமை வராது. அந்த அளவிற்கு மாதுளை குச்சிக்கு தெய்வீக சக்தி உள்ளது. எனவே இவற்றை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள், நிச்சயம் நல்ல பலனைத் தரும்.