அல்லு அர்ஜுன் கட்டுமஸ்தான உடலை எப்படி பராமரிக்கிறார்? டயட் ரகசியம்
இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த புஷ்பா-2 திரைப்படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பாட்னாவில் வெளியிடப்பட்ட புஷ்பா-2 ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புஷ்பா படத்தில் கதாநாயகர் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுனின் தோற்றமும், கச்சிதமான உடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. 42 வயதான அல்லு அர்ஜுன் அவரது வசீகரிக்கும் தோற்றம், மின்னல் வேகா நடனம் மற்றும் ஈர்க்கக்கூடிய உடலமைப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த படத்தில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது தோற்றம் கம்பீரமாக உள்ளது என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
அந்த வகையில், புஷ்பா படத்தில் அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அல்லு அர்ஜுனின் டயட் ரகசியம் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அல்லு அர்ஜுன் டயட் பிளான்
அல்லு அர்ஜுன் பல்வேறு படங்களில் சிக்ஸ்-பேக் காட்டி நடித்திருக்கிறார். அவருடைய ரசிகர்களும் அவரை பார்த்து ஜீம் சென்று பயிற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில், அல்லு அர்ஜுன் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டிரெட்மில்லில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஓடுவாராம். அவரது டயட் உணவில் கட்டாயம் முட்டைகள் இருக்குமாம். இதனை அவர் முந்தைய நாள் கடைசி உணவைப் பொறுத்ததாக அமையும் என கூறப்படுகின்றது. காலை உணவை தொடர்ந்து அவரது வாழ்க்கை முறை எளிமையாகவும் சீராகவும் இருப்பதால் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவாராம்.
அத்துடன் அல்லு அர்ஜுனின் நம்பமுடியாத உடல் மாற்றங்களுக்கு சைக்கிள் ஓட்டுவது முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. சாதாரண வொர்க்அவுட்டை விட அதிக நன்மைகளை தருகின்றது சைக்கிள் ஓட்டுவது தருகின்றது என அவர் நம்புகிறார். இதுவே அவரின் உடல் தோற்றத்திற்கு முக்கிய காரணம்.
உடற்பயிற்சி
அல்லு அர்ஜுன் போன்று உடல் வலிமை பெற வேண்டும் என்றால் வலிமை பயிற்சி, இதய பயிற்சிகள், ஸ்ட்ரெச்சஸ் மற்றும் செயல்பாட்டு பயிற்சி ஆகியவற்றை தினமும் செய்து வர வேண்டும்.
என்ன நடந்தாலும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். இவர், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தோட்ட வேலைகளில் ஈடுபடுகிறாராம்.
வொர்க்அவுட்டிற்குப் பிந்தைய உணவில் ஒரு பானம் அல்லது ஷேக் சேர்த்து கொள்வது அவரது வழக்கமாம். அல்லு அர்ஜுன் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் தேவைகளுக்கமைய டயட்டை நிர்வகித்து வருகிறார்.
ஒரு புதிய கதாபாத்திரத்திற்காக, அவர் தனது தோற்றத்திற்கும், உடலமைப்பிற்கும் உணவுத் திட்டத்தை மாற்றி விடுவார் என்றும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |