அட தெரியாம போச்சே.. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் டீ- தினமும் குடிக்கலாமா?
பொதுவாக காலை அல்லது மாலை வேளைகளில் தேநீர் குடிப்பது வழக்கம்.
இது சுவைக்காகவும்,களைப்பிற்காகவும் சிலர் குடிப்பார்கள். இன்னும் சிலர் தன்னை உற்சாகமாக வைத்து கொள்ள தேநீர் விரும்பி குடிப்பார்கள்.
லெமன் டீ, க்ரீன் டீ ஆகிய தேநீர் வகைகள் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
அதே போன்று மஞ்சள் தேனீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் குணமாகும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தேநீர் மஞ்சள் கலந்து தயாரிக்கலாம், அத்துடன் சுவைக்காக மிளகு மற்றும் தேன் சேர்த்து கொள்ளலாம்.
அந்த வகையில் மஞ்சள் தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் தேநீரால் கிடைக்கும் பலன்கள்
1. மஞ்சள் கலந்து தயாரிக்கப்படும் தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குர்குமின், மாங்கனீசு, இரும்பு, தாமிரம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2. மூட்டு வலி அல்லது வீக்கம் பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் மஞ்சள் கலந்து தேநீர் குடிக்கலாம். இதில் ஊட்டசத்துக்கள் மூட்டுவலியை சரிச் செய்கிறது.
3. மஞ்சள் டீ போன்று க்ரீன் டீ, ரெட் டீ, லெமன் டீ ஆகியவற்றையும் குடிக்கலாம். இதனால் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகின்றது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
4. கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உடலை சிலிம்மாக மாற்றும் ஆற்றல் மஞ்சள் தேநீருக்கு உள்ளது.
5. கீல்வாதத்திலும் மஞ்சள் தேநீர் முக்கிய இடம் பிடிக்கிறது. இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் மஞ்சள் கலந்து தேநீர் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |