ரசிகைக்கு கொத்தாக ரூ.25 லட்சம் அள்ளி கொடுத்து இரங்கல் தெரிவித்த 'புஷ்பா 2' அல்லு அர்ஜுன்!
அல்லு அர்ஜுன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியைக் காணவந்தபோது இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து , ரூ. 25 லட்சம் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இது பற்றிய முழு விபரத்தை இங்கு பார்க்கலாம்.
புஷ்பா 2' அல்லு அர்ஜுன்
நடந்த டிசம்பர் 4 ம் திகதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாது. இந்த நிலையில் சந்தியா தியேட்டரில் நடந்த சோகமான சம்பவத்திற்கு அல்லு அர்ஜீன் இரங்கலான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியை காண வந்த ரசிகை அதிகமான மக்கள் கூட்டத்தின் நெரிசலில் மாட்டி உயிரிழந்துள்ளார். இதற்காக அல்லு அர்ஜீன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியது “நாம் என்ன செய்தாலும் ஆறுதல் சொன்னாலும் எதுவும் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் எங்கள் தரப்பில் இருந்து, உங்களுக்கு எது தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் உணர்வுபூர்வமாக உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்காக, குறிப்பாக குழந்தைகளுக்காக நான் உடன் இருக்கிறேன். அதற்காக என் தரப்பில் இருந்து ரூ.25 லட்சத்தை நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன்.
எல்லா மருத்துவச் செலவையும் நாங்கள் பார்த்துக்கோள்வோம். இந்தக் கடினமான சூழலைப் புரிந்துகொள்கிறோம்" எனக் கூறியுள்ளார். அத்துடன் "அனைத்து ரசிகர்களுக்கும் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், திரைப்படங்களை ரசிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தயவுசெய்து கவனமாக இருங்கள். படத்தைப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |