நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்... வைரலாகும் திருமண புகைப்படங்கள்
நடிகர் காளிதாஸ் மற்றும் பிரபல மாடல் தாரிணியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
காளிதாஸ் ஜெயராம்
தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் ஜெயராம். குறிப்பாக நகைச்சுவை கலந்த குண குணச்சித்திர கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற இவரின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம்.
இவர் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவர் தனுஷின் ராயன் படத்தில் தம்பி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தமிழ் மட்டுமின்று ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில தமிழ் படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
மீன் குழம்பும் மண்பானையும், காதல், விக்ரம், பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த பாவக்கதைகள் படத்தில் திருநங்கையாக நடித்த காளிதாஸின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
காளிதாஸ் ஜெயராம் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இவர்களின் நிச்சயதார்ந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தது.
இந்நிலையில் இன்று கேரளாவில் குருவாயூர் கோவிலில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடந்துள்ளது. குறித்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |