ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் விவாகரத்து வதந்தி; ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த வைரல் புகைப்படம்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு இவர்கள் இணைந்து தற்போது எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கையில் குழந்தையுடன் அமலா பால்: நடுக்கடலில் திருமண நாள் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்... தீயாய் பரவும் காணொளி
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
இந்திய அளவில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும்.
சினிமாத் துறையில் சந்தித்துக் கொண்ட இருவரும் காதலித்து பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகமே பொறாமை கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சியான தம்பதிகளாக இருந்த இவர்கள், அண்மை காலமாக இருவரும் பிரிந்த வாழ்வதாக சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் பொது வெளியில் எந்தவொரு கருத்தையும் பகிர்ந்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராய்யுடன் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தயாரிப்பாளர் அனு அவரது சமூக வலைதள பக்கத்தில் மற்போது வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் பல மாதங்களாக கிளம்பிய இவர்களின் விசாகரத்து சர்ச்சைக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |