வசூலில் பட்டையை கிளப்பும் புஸ்பா 2... ரசிகைக்கே 25 லட்சத்தை வாரிக்கொடுத்த அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் திகதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் தற்போது வசூல் வெறியாட்டம் ஆடிவருகின்றது.
5 நாள் முடிவில் ரூ. 900 கோடி வரை வசூல் வேட்டை நமத்திய இந்த திரைப்படம் வெளியான வேகத்தில் ரூ. 1000 கோடியை நெருங்கிவருகின்றது.
அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர். புஷ்பா திரைப்படத்தில் முதல் பாகம் சந்தனமர கடத்தலுடன் தொடர்புடைய கதைக்களத்தை கொண்டு கடந்த 2021 ஆம் வெளிவந்தது.
இதன் மாபெறும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் புஷ்பா 2 திரைப்பம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகின்றது.
ரூ.25 லட்சம் அள்ளி கொடுத்து இரங்கல்
புஷ்பா 2 படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியை காண வந்த ரசிகை அதிகமான மக்கள் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவரின் மகன் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த சம்பவம் படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்காக அல்லு அர்ஜீன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அண்மையில் இரங்கள் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், என்ன செய்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது இருப்பினும் அந்த குடும்பத்துக்கு என்னால் முடிந்தவரையில் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்து உயிர் நீத்த ரசிகைக்காக 25 லட்சம் ரூபாய் பணத்தை அவரின் குடும்பத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் அல்லு அர்ஜுன் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 460 கோடிகள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்கு ரூ. 300 கோடி சம்பளம் பெற்று கோட் திரைப்படத்தில் 275 கோடி சம்பளம் பெற்று டாப்பில் இருந்த விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளர்.
மேலும் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான மாளிகையில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மட்டுமன்றி சமூக ஊடகங்களில் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க தொகையை சம்பாதிக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |