சரிகமப சீசன் 5: ஷிவானிக்கு நடிகர் தனுஷ் கொடுத்த வாய்ப்பு... குவியும் வாழ்த்துக்கள்
சரிகமப வில் 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவான ஷிவானிக்கு நடிகர் தனுஷ் சினிமாவில் பாட வாய்ப்பு கொடுப்பதாக கூறிய விடயத்தை, நடுவராக பங்கேற்று வரும் ஸ்வேதா மோகன் மேடையில் அறிவித்த காணொளி தற்போது வெளியாகி இணைத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன், ஷிவானி, பவித்ரா என இறுதிச்சுற்று போட்டியாளர்களாக மொத்தம் 6 போட்டியாளர்கள் தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில், 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக ஷிவானி அறிவிக்கப்படும் முன்னரே நடிகர் தனுஷ் கொடுத்த வாய்ப்பு குறித்து, இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் ஸ்வேதா மோகன் மேடையில் அறிவித்த காணொளி இணைத்தில் தற்போது படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |