காதல் ஈர்ப்பு அதிகம் கொண்ட ராசிகள் - உங்க ராசியும் இருக்கா பாருங்க?
ஜோதிட கணிப்பின்படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதல் ஈர்ப்பு அதிகம் இருக்குமாம் என கூறப்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரம்
யார் எப்போது காதலில் விழுவார்கள், எப்படி காதல் வரும் என்பது யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. யாரை எல்லாம் நாம் இவன் காதலிப்பானா என நினைக்கிறோமா அவர்கள் தான் காதலில் முதலில் விழுவார்கள்.
தற்போதைய சமூகத்தில் காதல் என்பது ஒரு விளையாட்டாக மாறி விட்டது. ஒரு காதல் எல்லோருக்கும் பல வழிகளில் உதவும் இது அவன் தேர்ந்தெடுக்கும் நபரை பொறுத்து உள்ளது.
அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசி மற்றும் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், எந்த எதிர்பாலின ராசி அல்லது நட்சத்திரத்தினரிடம் அதிக ஈர்ப்பை உணருவார்கள் என்று மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால் இயற்கையான ஈர்ப்பு அதிகம் கொண்ட காதலில் விழாதவர் கூட காதலில் விழவைக்கும் ராசிகள் எது என்று பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

| ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியான, நம்பகமான மற்றும் உணர்ச்சிவசப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் இந்த நிலைத்தன்மை மற்றும் பாசம் மற்றவர்களை எளிதில் ஈர்க்கிறது. இவர்களின் அன்பான பார்வை மற்றும் ஆதரவான நடத்தை காரணமாக பலர் இவர்களிடம் இயற்கையாகவே ஈர்க்கப்படுகின்றனர். ஒருவரிடம் பல நல்ல செயல்களும் குணங்களும் இருப்பது கடினம் அப்படி நல்ல குணங்களை மட்டும் கொண்ட இந்த ரிஷப ராசிக்காரர்களிடம் யார் காதலில் விழாமல் இருப்பார்கள். |
| மிதுனம் | மிதுன ராசி உள்ளவர்கள் சமூக மற்றும் பேச்சுத் திறன் கொண்டவர்கள். இவர்களின் நகைச்சுவை, அறிவு மற்றும் உரையாடல் திறன் காரணமாக மற்றவர்கள் இவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகின்றனர். இதன் காரணமாக பலரும் இவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். இவர்களின் இந்த உற்சாகம் காரணமாக இவர்கள் எப்போதும் கவர்ச்சிகரமாகவும் அன்புடன் மற்றவர்களால் பார்க்கப்படுகின்றனர். எனவே தான் மிதுன ராசி நபர்களுக்கு காதல் மிகவும் எளிதில் செட் ஆகிறது போல. |
| சிம்மம் | சிம்ம ராசி உள்ளவர்கள் தங்கள் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கை காரணமாக பலரால் விரும்பப்படுகின்றனர். இவர்களின் இந்த கருணை, தைரியம் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை மற்றவர்களை எளிதில் ஈர்க்கிறது. இவர்களின் ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணங்கள் காரணமாக இவர்கள் மற்றவர்களால் எப்போதும் கவனனிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. |
| துலாம் | துலாம் ராசி உள்ளவர்கள் நியாயமான மற்றும் சமநிலை உணர்வு கொண்டவர்கள். இவர்களின் நட்பு, நாகரிகம் மற்றும் அழகான ஆளுமை காரணமாக பலர் இவர்களிடம் ஈர்க்கப்படுகின்றனர். இவர்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அன்புடன் நடத்துகிறார்கள். காதலுக்கு முக்கியமான பண்பு இது தான். எனவே தான் அதிகமான நபர்கள் இவர்கள் மூலம் காதல் வசப்படுவார்கள் என கூறப்படுகின்றது. |
| விருச்சிகம் | விருச்சிக ராசி உள்ளவர்கள் மிகவும் இரகசியமான மற்றும் தீவிரமான குணம் கொண்டவர்கள். இவர்களின் ஆழமான உணர்வுகள் மற்றும் விசுவாசம் காரணமாக மற்றவர்கள் இவர்களிடம் ஈர்க்கப்படுகின்றனர். இவர்களின் கவர்ச்சியான பார்வை மற்றும் உணர்ச்சிபூர்வமான தன்மை காரணமாக பலர் இவர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகின்றனர். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).