தினமும் 3 டீஸ்பூன் இதை மறக்கமால் சாப்பிடுங்க... உடல் சுத்தமாக இருக்குமாம்!
பொதுவாக தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியமானது என்று கூற முடியாது.
அதிலும் இன்று நம்மைச் சுற்றி ஜங்க் உணவுகள் சூழ்ந்திருப்பதால், நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளால் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்துவிடுகிறது.
இப்படி ஒருவரது உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு பாதிக்கப்படும். இதன் விளைவாக பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே உடலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியமானது ஆகும்.
உடலை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளன. இப்போது அதில் உடலை சுத்தம் செய்யும் ஒரு சூப்பரான மருந்து குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு பற்கள் - 12
- ரெட் ஒயின் - 500 மிலி
தயாரிக்கும் முறை
-
முதலில் பூண்டின் தோலை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில், அதனை போட்டு அத்துடன் ரெட் ஒயினை ஊற்றி, பாட்டிலை காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
-
இந்த கலவையை 2 வாரம், அதாவது 14 நாட்கள் பிரகாசமான இடத்தில் வைத்து ஊற வைக்கவும்.
- ஒவ்வொரு நாளும் அந்த பாட்லை 30 நொடிகள் குலுக்க வேண்டும்.
இதனால் கலவை நன்கு ஒன்று சேரும். பின் 14 நாட்கள் கழித்து, பாட்டிலைத் திறந்து, வடிகட்டி, மீண்டும் அக்கலவையை அதே கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- இந்த மருந்தை தினமும் மூன்று வேலை உணவு உண்பதற்கு முன் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு மாதம் இப்படி உட்கொள்ள வேண்டும்.
குறிப்பு
இது இரத்தத்தை மட்டுமின்றி, உடலுறுப்புக்களையும் சுத்தம் செய்வதுடன் வலிமையாக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்வது மிகவும் நல்லது