பஞ்சாபி ஸ்டைல் நெல்லிக்காய் அல்வா... ஆரோக்கியத்தை அள்ளித்தருமாம்
அதிகமான சத்துக்களைக் கொண்ட நெல்லிக்காயில் அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு நலம் தரும் ஊட்டச்சத்துகள் நிறைந்த நெல்லிக்காய் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நெல்லிக்காயில் துவையல், ஊறுகாய், சட்னி என்று செய்து நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் நெல்லிக்காயில் பஞ்சாவி ஸ்டைல் அல்வா செய்து யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.
அந்த வகையில் நெல்லிக்காய் அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் (ஆம்லா) – 6 (பெரிய அளவு, துருவியது)
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப்
சர்க்கரை / நாட்டு சக்கரை – 1/2 கப்
குங்குமப்பூ – சிறிதளவு
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 (வறுத்தது)
பாதாம், பிஸ்தா – 1 டேபிள்ஸ்பூன் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
செய்முறை
நெல்லிக்காயை நன்றாக கழுவி துருவி எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் மிதமாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்க்கவும்.
மிதமான தீயில் கொஞ்சம் நிறம் மாறும் வரை வதக்கியதும், தீயை மிதமாக வைத்துவிட்டு பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு நாட்டுச் சர்க்கரையை உள்ளே சேர்த்து தொடர்ந்து கிளறவும். அல்வா பதத்திற்கு வரும் தருணத்தில் தண்ணீரில் குங்குமப்பூவை ஊற வைத்ததை சேர்க்கவும்.
கடைசியாக வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து, ஏலக்காய் தூள் தூவி இறக்கினால் பஞ்சாபி நெல்லிக்காய் அல்வா தயார்.
எந்த நேரத்தில் உண்பது சிறந்தது?
காலை உணவிற்கு பின்பு சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்குமாம். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக சாப்பிட்டால் சக்தி அதிகரிக்கின்றது.
தூங்கும் முன்பு சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சமநிலையில் வைத்திருக்க முடியுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |