ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் கோங்குரா சட்னி! யார் யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை இரத்தத்தினால் வரும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதனால் மருந்துவில்லைகள் அதிகமாக எடுத்து கொள்கிறார்கள். இது போன்ற தொற்றுக்களால் இரத்ததில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது.
இவற்றையெல்லாம் மருந்துவில்லைகளை விட உணவுகள் தான் நிரந்தரமாக சுத்தம் செய்யும்.
அந்த வகையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் கோங்குரா சட்னி எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளிச்சக்கீரை - 2 கப்
- தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
- வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை
- கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கோங்குரா சட்னி எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் சட்னிக்கு தேவையான புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.
தாளிப்புடன் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
அதில் புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க கொள்ளலாம்.
புளிக்கீரை வதங்கிய பின்னர் அதனை மிக்ஸி சாரில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி தயார்!
முக்கிய குறிப்பு
புளிக்கீரையை மிக்ஸியில் போடும் போது சற்று ஆரவிட்டு போடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |