புகழை நிஜ கோமாளியாக்கி அரங்கேறிய சம்பவம்... சமீபத்தில் நடந்த ஏமாற்றம்! கண் கலங்கிய தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் தான் புகழ். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அலப்பறை தான் மிகவும் டாப். அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ்.
தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான். கடலூரைச் சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக் கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார். அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள்.
அதன் பின்னர் இவர் மெக்கானிக் கடையில் வேலை செய்யவும், பின்பு வாட்டர் வாஷ் கடையிலும் வேலை செய்துள்ளார். அந்த சமயத்தில் இவருக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு, பின்பு கலக்கப் போவது யாரு சீசன் 6ல் இயக்குனராக பணிபுரிந்து இருக்கின்றார். செட்டில் அனைவரிடமும் இவர் கலகலப்பாக பேசுவார் அதன்மூலம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சி மூலம் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் புகழ். இந்நிலையில் சமீபத்தில் புகழ் பேசுகையில், ‘குக்கு வித் கோமாளி’ ஷோவுலதான் நான் கோமாளி. ஆனா, சிலர் என்னை நிஜக் கோமாளியாவே நினைக்கின்றனர். அதுதான் ஏன்னு தெரியவில்லை.
இருதினங்களுக்கு முன்பு ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து பேசறோம்னு ஒரு போன் வந்தது. கிண்டியில ஒரு இடத்துக்கு வர முடியுமான்னு கேட்டாங்க. நானும் நம்பி ஆசையா கிளம்பிப் போனேன். ஆனா கிண்டி போய் அந்த நம்பரைக் கூப்பிட்டா சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு. யாரு எதுக்கு சார் இப்படிப் பண்றாங்க?’ என்று கூறி கண்கலங்கியுள்ளார்.