கார் வாங்கியதால் புகழ் மீது பொறாமையில் இருக்கின்றாரா குக் வித் கோமாளி பாலா? புகழ் பதிவிட்ட பதில்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்கள் தான் பாலா மற்றும் புகழ். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னுக்கு வந்த புகழ் சமீபத்தில் கார் வாங்கி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் புகழை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள புகழ்.
என் பரம்பரையிலேயே வாங்கிய முதல் கார் இதுதான். இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் டிவி நகைச்சுவை பிரபலமான பாலாவின் ரசிகர் ஒருவர் மீம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.
அதில் ஒன்றை அழ, ஏன் என அவரிடம் இன்னொரு ரசிகர் கேட்க, அந்த ரசிகரோ, பாலா கார் வாங்கவில்லை என தமது வருத்தத்தை பதிவு செய்ய, இதை அறிந்த புகழ், ‘இது பாலாவின் காரும் தான் நண்பா.. நாங்க வேறவேற இல்லை!’ என்று பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்த பாலா, “லவ் யூ மாமே.. நம்ம கார் இது” என புகழுக்கு பதில்அளித்துள்ளார். இவர்கள் இருவரின் நட்பை பார்த்து பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
