குளிர்கால சளி,காய்ச்சல் விரட்டும் புதினா டீ வேறு என்னென்ன செய்கின்றது தெரியுமா?
பொதுவாக நமக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருந்து வீட்டிலுள்ள சமையலறையில் இருக்கின்றது என முதியவர்கள் கூறுவார்கள்.
அந்த வகையில், புதினா புத்துணர்ச்சியூட்டும் நறுமணமுள்ள மூலிகைகளில் ஒன்றாகும்.
இது குமட்டல் உணர்வு, வயிற்றுப் பிடிப்பு, சளி காய்ச்சல், வாய் துர்நாற்றம், அஜீரணம்,சரும பளபளப்பு, தலைமுடி வளர்ச்சி இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகின்றது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த புதினாவை டீ, சம்பல், குழம்பு இப்படி பல்வேறு வழிகளில் எடுத்து கொள்ளலாம்.
இதன்படி, புதினாவினால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை தெரிந்து கொள்வோம்.
புதினா டீ
1. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகின்றது. அத்துடன் தொண்டை கரகரப்பு, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை தடுக்கும்.
2. புதினாவில் உள்ள புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் புதினாவில் இருக்கும் மெந்தோல் எனும் பொருள் கிருமிகளை அழித்து வாய் துர்நாற்றத்தை குணமாக்குகின்றது.
3. முகப்பருவால் ஏற்படும் சிவப்பை புதினா இல்லாமலாக்குகின்றது. அதே நேரத்தில், ஆன்டிசெப்டிக் பண்புகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுத்து பருக்கள் வராமல் தடுக்கின்றன. இதனால் சொறி, அரிப்பு பிரச்சினை வருவது குறையும்.
4. தேநீரில் உள்ள மெத்தனால் என்ற பொருள் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. வயிற்றுவலியை தடுத்து மலச்சிக்கலை சீர்ப்படுத்துகின்றது.வீக்கம் மற்றும் அஜீரணத்தின் பிற அறிகுறிகள் குறையும்.
5. புதினா தேநீரின் வாசனை தற்காலிகமாக பசியைத் தடுக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய தேவை இருக்காது. டயட்டில் இருப்பவர்கள் இதனை தொடர்ந்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |