இந்த வயசுல குழந்தை தேவைதானா? தேவயானியிடம் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி
நடிகை தேவயானி தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போதைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை தேவயானி
பிரபல நடிகையான தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது சீரியலில் தனது நடிப்பினை தொடர்ந்து வரும் தேவயானி, இதில் மிகவும் எதார்த்தமாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றார்.

கைக்குழந்தையுடன் தேவயானி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான புதுபுது அர்த்தங்கள் சீரியலில் சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக நடித்திருந்த தேவயானி தற்போது கைக்குழந்தை ஒன்றினை வளர்ப்பவராக நடித்து வருகின்றார்.
தேவயானியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் குறித்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தனது தாய் பேரன் பேத்தி பார்க்க வேண்டிய தருணத்தில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறி தேவயானியிடம் புலம்பும் நிலையில், தேவயானி வளர்க்கும் குழந்தையை அலுவலக பெண் ஒருவர் கொண்டு வருகின்றார்.
இதனை அவதானித்த ஆர்.ஜே. பாலாஜி இந்த வயசுல இந்த குழந்தை உங்களுக்கு தேவையா? என்று தேவயானியைப் பார்த்து கேட்கின்றார். இதற்கு தேவயானி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.