வெளியே வந்தனா என் ஆட்டம் பயங்கரமா இருக்கும்.. தலைமறைவான பப்ஜி மதனின் ஆடியோ!
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தளமான பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவந்த 'பப்ஜி மதன்' என்கிற யூடியூபர் தலைமறைவான சம்பவம் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஆன்லைன் விளையாட்டான பப்ஜியில் பெண்களை பற்றியும், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் லைவ் ஸ்டீரிம் செய்து வந்த மதன் ஓபி என்பவர் மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனால், ஆஜராக கூறியும், மதன் ஆகாததால், தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறாக போலீஸ் தேடிக் கொண்டிருக்கும்போதும் விபிஎன் மூலமாக ஆன்லைன் விளையாட்டிற்கு வந்த பப்ஜி மதன் தன்னை கைது செய்வது மூலமாக பேசுவதை ஒடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
அந்தரங்க மருத்துவராக மாறிய பப்ஜி மதன் - மாகாபா ஆனந்த் ஆதரவு? கசிந்த வீடியோ
அதேசமயம் வழக்கம்போல கெட்ட வார்த்தைகளில் பேசாமல் தத்துவமாக பேசியுள்ளார். மேலும், மதன் பேசிய பழைய ஸ்டீரிம் வீடியோகளை வைத்து பலரும் பல வீடியோகளை பதிவிட்டு வருகின்றனர்.
கடைசி ஸ்ட்ரீம் மதன் ஒரு பெண்ணிடம் விளையாடுகையில், ஒருவேளை என்னை கைது செய்தால் என் ஆட்டம் அப்புறம் வெறித்தனமா இருக்கும் என சாதரணமாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ வைரலான நிலையில், மதன் விபின் வைத்து இருப்பிடத்தை மாற்றுவதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போலீசார் சென்றுள்ளனர்....